Friday, March 30, 2007

ரிஷியின் பக்கம்

*வேந்தன் ஐயா அவர்களுடன் என் அனுபவம்...*

முன் குறிப்பு:

(வித்தியாசமா முன்குறிப்புன்னு இருக்றதுல ஒண்ணும் தப்பு இல்லையே...!)

இது என் நிஜ அனுபவம்... இதுவும் ஒரு காமெடியாகவே அமைந்துவிட்டது... என்ன செய்ய...? எல்லாம் அறியாமையினால் வரும் பிழைகள்...


===========================================================


அப்பத்தான் நான் நம்பிக்கை குழுமத்தில் சேர்ந்திருந்தேன்...


ஆசைக்கோளாறுல மனசுல என்னென்ன தோணுச்சோ அத எல்லாம் எழுத ஆரம்பிச்சேன்.


அப்ப எனக்கு ராமா வ மட்டுந்தான் தெரியும்...


ராமா தான் நம்பிக்கை; நம்பிக்கை தான் ராமா அப்டீன்னு நெனச்சிக்கிட்ருந்தேன்...


வேந்தன் ஐயா அவுகளும் பின்னூட்டம் இடுவார் என்னோட உளறலுக்கு...அப்பல்லாம் நான்
இப்டித்தான் நெனச்சிக்குவேன்...


"ஐயோ... யாரு பெத்த புள்ளயோ... நம்ம கடுதாசிக்கு பதிலு போடுதே.. மாரியாத்தா
இந்த தம்பிக்கு கை, காலு சொகம் கொடு தாயி" அப்டீன்னு நெனச்சிக்குவேன்...


அப்றம் அவரோட கடுதாசில கீழ "வள்ளுவம் என் சமயம்" அப்டீன்னு போட்ருப்பாரா...


ஆஹா இந்த தம்பிக்கும் நம்மள மாதிரியே வள்ளுவர பிடிச்சிருக்கே...னு எனக்கு ஒரே
ஆச்சர்யம்...!!


அங்கன சின்சின்னாட்டி ன்னு போட்ருப்பார்...


ஆஹா இந்தத் தம்பி எம்புட்டு அழகா நம்ம "சின்னக்காம்பட்டிய..." இங்கிலீஷுல
சொல்லுது...னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்...


(எங்க கிராமத்துக்கு பக்கத்ல "சின்னக்காமன்பட்டி" ன்னு ஒரு ஊரு இருக்குங்க...)


(அப்டி நெனச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு...அத பின் குறிப்புல
படிச்சுக்கோங்கோ...)


ம்ம்... நமக்குத்தான் இந்த பாழாப்போன இங்கிலீபீசு மர மண்டையில ஏறல...


ஒரு நாளாச்சும் இந்த தம்பிய சிநேகம் பிடிச்சி நம்ம ஊரு பசங்ககிட்ட
இண்டரூஸ்ட் (Introduce)
பண்ணனும் னு நெனச்சேன்...


அப்றம் இந்த ஊருக்கு வந்தப்ப தான் தெரிஞ்சது... வேந்தன் ஐயாவப் பத்தி...அவரு
பெரியவருன்னு.....அவரும் இந்த தேசத்ல தான் இருக்காருன்னு ஒரு தடவ ராமா சொன்னார்
அப்றமா...


இன்னொரு தேசத்ல ஒரு தமிழ்க்காரவுகளோட காண்டாட்டு (Contact) கெடச்சா எம்புட்டு
ஒத்தாசய இருக்கும்...னு நெனச்சி அவுகளுக்கே ஒரு மடல் போட்டேன்..


ஐயா... நீங்க எங்கன இருக்கீங்க...? அப்டீன்னு


வள்ளுவம் என் சமயம் னு எழுதியிருக்குல்ல... அதுக்கு மேல எழுதியிருக்கோம்ல
பாக்கலியா அப்டீன்னு சொல்லிட்டார்...


அப்றமாத்தான் தெரிஞ்சது


ஆஹா அது சின்னக்காம்பட்டி(சின்னக்காமன் பட்டி) இல்லடா .. னு..


இங்கன விசாரிச்சப்ப சின்சின்னாட்டி...அப்டின்னு ஒரு ஊரு நெசமாவே இருக்காம்...


அடி ஆத்தி இம்புட்டு விஷயம் இருக்கா...?


விளி : ஒண்ணு ரெண்டு மூணு அப்டின்னு எதோ நெம்பரா (NUMBER) எழுதியிருந்தாக...


சரி நாம ஒழுங்கா படிக்கல... அதான் ஒண்ணாப்ல இருந்து சொல்லிக்கொடுறார் போல ன்னு
நெனச்சேனுங்க...


அப்றமா இப்ப (14-Dec-2006, Thursday Night) தூங்கிட்ருக்றப்ப தான்


திடீர்னு புத்தருக்கு போதியில் எப்டி ஞானம் வந்துச்சோ அது மாதிரி ஒரு ஃபிளாஸ்
வந்திச்சுங்க...


எங்கூர்ல சின்ன செங்கல்ல நெம்பர்(NUMBER) ஊஸ் (USE) பண்ணி காதுல வச்சி
பேசுவாங்கல்ல
ஒரு வேளை அதுவா இருக்குமோ ன்னு பட்டுச்சு ங்க...


சரி ன்னு அந்த பழய மடல எல்லாம் தேடோ தேடு ன்னு தேடிட்டேனுங்க...ராத்திரி
தூக்கம் இல்லாம தேடினேனுங்க... கெடைக்கல...


என்ன கெரகமோ ன்னு பாத்தா, "Wireless Network Connection Not Connected.."
அப்டீன்னு
ஒரு சின்ன சதுர ட்ப்பாவுக்குள்ள சொல்லிச்சு நம்ம மடிக்கணினி.


எப்பவும் போல "ங்எ" ன்னு முழிச்சிட்ருந்தேன்...!


அப்றம் ரவுட்டர தாஜா பண்ணி இப்ப அனுப்றேனுங்க...கடைசி வர்ல இப்பக்கூட அந்த
கடுதாசி ஜீமெயில்ல காணோம்ங்க...


பின் குறிப்பு:


கூத்திப்பாரை ன்னு ஒரு கிராமத்ல பஸ்சுக்காக நின்னுக்கிட்ருந்தேன்...அப்ப ஒரு
தாத்தா வந்தார். அப்ப நான் ஐ ஸ்கூல் (High School) படிச்சிட்ருந்தேன்... கால்ல
கொழாயி(PHANT) மாட்டிருப்பேன்...அப்ப அதுக்கு தனி மவுசு. படிச்சவகதான் கொழாயி
போடுவாக...


அந்த தாத்தா, "ஏந்தம்பி... இம்புட்டு பெரிய படிப்பு படிக்றியே...
"கூத்திப்பாரைக்கு இங்கிலீஷ்ல என்னன்னு சொல்லு...?" அப்டீன்னார்...


இங்கிலீஷ்லயும் அதே தான் தாத்தா...


"ஓ...அப்ப நீ பெயிலு விழுந்து பெயிலு விழுந்து படிச்சிட்ருக்கியோ...?"


அவரு அங்கன இருந்த எல்லார் கிட்டயும், "நான் இந்த தம்பிகிட்ட ஒரே ஒரு சின்னக்
கேள்விதான் கேட்டேன்...பதிலு தெரியாம பேக்கு பேக்குன்னு முழிக்குது..." னு
சொல்லி மானத்த வாங்கிட்ருந்தார்...


இதென்னடா கெரகம் னு நெனச்சேன்.


எங்கூட இன்னொரு பயபுள்ள நின்னுட்ருந்தான்... அவனோ, "என்ன தாத்தா
கேட்டீக... கூத்திப்பாரைக்கு
இங்கிலீஷ்லயா...? அது "க்குட்ட்ப்பா..."(KKUTTPPA)" என்று நீட்டி ஒரு ஸ்டைலா
சொன்னான்.


பரவாயில்லியே... கெட்டிக்காரத்தம்பி... இந்தத் தம்பி மாதிரி படிக்கணும் னு எனக்கு
அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார்...


என்ன செய்ய நம்ம கெரகம் அப்படி...?!


எப்பவும் போல 'ங்எ' ன்னு முழிச்சிட்ருந்தேன்...!


சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."