Thursday, October 25, 2007

Flushing பிள்ளையார் in New York.

Flushing பிள்ளையார் in New York.

நேற்று நியூ யார்க் அருகேயுள்ள Flushing ல் வீற்றிருக்கும் விநாயகரைத் தரிசிக்கும் வாய்ப்புகிட்டியது. இது இக்கோவிலுக்கு இரண்டாவது விஜயம்.

முதலில் விநாயகனுக்கும் எனக்குமுள்ள உறவு என்ன....?

விநாயகனை விநாயகன் என்பதைவிட பிள்ளையார் என அழைக்க எனக்குப் பிடிக்கும். பிள்ளையாரை எனக்கு அதிகமாய் பிடிக்க ஒரே ஒரு காரணம்-

நான் என்றுமே பிள்ளையாரை ஒரு முக்கியமான தெய்வமாய் பார்ப்பதில்லை.
என் சின்ன வயதில் பிள்ளையார் என்னுடன் விளையாடுவதாய் மனதில் சினிமா ஓடும்.

அதில்-

1. அவருடைய தொந்தியில் நான் கிள்ளிவிட்டு ஓடிவிட.... அவர் தன் தும்பிக்கையால் தலையில் அடித்துக்கொண்டு குய்யோ...முறையோ என என்னைத் துரத்திக்கொண்டு ஓடி வர....

2 அவருடைய தொந்தியில் உட்கார்ந்துகொண்டால் அனந்தமாய் இருக்கும். அவர் மூச்சினை உள்ளிழுக்கும்பொழுது நான் வெளியே.... மூச்சினை வெளிவிடும்பொழுது நான் உள்ளிழுக்கப்படுவேன்... ஆஹா... என்ன ஒரு சுகம்....! அப்பொழுதே அவருக்கு abdominal breathing தெரிந்திருக்கின்றதே என எனக்கு ஒரே ஆச்சர்யம்...

3. நான் மரங்களில் ஏறி விளையாடும்பொழுது கீழே விழுந்து காயங்கள் ஏற்படும்பொழுது கண்டிப்பாக பிள்ளையார் தன் துதிக்கையால் காயப்பட்ட இடங்களில் மருந்திடுவார்...(குறிப்பாக அது ஒரு கனாக்காலத்தில்... அந்த முள்ளுமுனி அடிச்ச கதைப்பாகம்...)

4. பரீட்சை காலங்களில் எங்களுக்கோ ஒரே திருவிழாவாக இருக்கும். பொதுவாக பரீட்சை என்றால் மாணவர்களுக்குப் பயமும் படிக்கவேண்டுமே என்ற கவலையும் இருக்கும். ஆனால் எங்கள் கிராமத்தில் நானும் என் நண்பர்களும் அந்த சின்ன வயதில்(3,4,5,6,7 ஆம் வகுப்புகளில்...) பரீட்சையை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்...புது சட்டை, புது பேனா, புது அட்டை... என மகிழ்ச்சியாய் இருப்போம்... (படிக்க மட்டும் மாட்டோம்...I Love School...when it is closed....!) 9 மணி பரீட்சைக்கு.... 8:55 வரை ஊரிலிருக்கும் எல்லா கோவில்களுக்கும் பயபக்தியாய் ஒரு விசிட்...! ஊதுபத்தி...சூடம் என அநியாயத்திற்கு மிகவும் நல்ல பையன்களாய் மாறியிருப்போம்...! ஆனால் விநாயகருக்கு மட்டும் நான் கும்பிட மாட்டேன்... மாறாக ஒரு நண்பனிடம் அரட்டுவது போல், "ஒழுங்கா எனக்குத் தெரிஞ்ச கேள்விய மட்டும் கேக்கனும் எக்ஸாம்ல.... இல்லென்னா... படவா நடக்றதே வேறே...." என்று மிரட்டல் தொணியில் வேண்டுதல் இருக்கும்...

5. விநாயகனுக்கென செய்யும் கொழுக்கட்டைகளில் அவருக்குப் படைக்கும் முன்பே சில காணாமல் போய்விடும். பிள்ளையாரே தின்னுட்டார் னு சொல்லிடுவேன்...!

இப்படித்தான் இருக்கும் விநாயகருக்கும் எனக்கும்...! அவருடைய அந்த உருவம் என்னுள் சிரிப்பை வரவழைக்கும் அந்த சின்ன வயதில். அதனாலோ என்னவோ மற்ற சாமிகளிடம் இருக்கும் அந்த பயமும் மரியாதையும் இவரிடம் இருப்பதில்லை. மாறாக நல்ல நட்பிருந்தது....!

என்னை வளர்த்த பெரியவர் தீவிர வைஷ்ணவர். நோ சைவம். அதனால் என்னுள் பலமுறை கேள்வி எழும். இந்த சாமி பூதம் இதெல்லாம் சும்மா... நம்மை ஏமாத்துறாங்கடா ன்னு... சரி இயேசு அல்லா புத்தா இவங்கள்ளாம் என்ன சொல்றாங்கன்னு அந்தந்த இயக்கத்தில் அப்ப அவங்க பின்னாடி அலைஞ்சதை( எங்கள் கிராமத்தில் கிறித்தவர்கள் கிறித்தவ மதப்பிரச்சாரம் செய்ய வருவார்கள்...அவர்கள் பின்னால் திரிவேன்...அவர்கள் பாடும் அந்த கீதங்களுக்காக....அவர்கள் கொடுக்கும் புத்தகங்களை இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று ஆசையாய் கேட்டுவாங்குவேன்... அவர்களோ மிகவும் மகிழ்ச்சியாக புதுப்புது புத்தகங்களைக் கொடுப்ப்பார்கள்... அதை வீட்டிற்குக் கொண்டுவராமல் அப்படியே ரொம்ப பொறுப்பா நம்ம புளுகாண்டி கடையில் எடைக்கு எடை போட்டு காசு வாங்கிடுவேனுங்கோ...! ) என்னை வளர்த்த பெரியவர் பலமுறை கண்டித்திருக்கின்றார்....

பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டா பிள்ளையாரே உனக்கு மொட்டைபோட்டுக்கறேன்..(ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளின் அடிவாரத்தில் ஒரு மிகப்பெரிய பிள்ளையார் இருப்பார்... பெருமாள் என்பதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் திருவண்ணாமலை பெருமாள், திருத்தங்கல்லில் வீற்றிருக்கும் பெருமாள்(இது தெந்திருப்பதி என்று போற்றப்பட்ட தலம்...சிவகாசியருகேயுள்ளது...) விஜயம் அடிக்கடி நிகழ்வதுண்டு... ) என்று திருவண்ணாமலை பிள்ளையாருக்கு வேண்டிக்குவேன். பாஸாகுறதுக்கெல்லாம் ஒரு வேண்டுதல்னா நான் எப்படி படிச்சிருப்பேன் னு உங்களுக்கே நல்லா தெரியும்...!


ம்ம்ம்... சரி மெயின் கதைய விட்டுட்டு எங்கனயோ ட்ராக் மாறுதே...!

ம்ம்... சரி மெய்ன் கதைக்கு போலாம்

இந்தக் கோயிலோட சரிதம் சொல்லத் தேவையில்லை...(ஏன்னா உனக்குத் தெரியாது ன்னு எனக்குத் தெரியும் னு நீங்க சொல்றது காதுல விழுதுங்கோ...வ்... கூகிள் ஆண்டவர் இருக்றப்ப இப்பல்லாம் இது தேவையில்லைன்னு ஆயிடுத்தோன்னோ ல்லியோ... ஷைலக்கா சொல்றமாதிரி நம்ம அகராதி புரட்டும் அறிஞர் தேவைப்பட்டா சொல்வாருங்கோ...!)

அந்தக் கோயில்ல உள்ளே நுழைஞ்சா....

என்ன கடவுள் தரிசனம் தந்து எதுவும் அற்புதம் பண்ணிட்டாரான்னா கேக்குறீங்க...?

ஊஹூம்...

நம்ம மைலாப்பூரே இடம் பெயர்ந்து இங்கன வந்திடுச்சோன்னு ஒரு மஹா ப்ரஹ்மை ஏற்பட்டுச்சுங்கோ...ஆமா எல்லோரும் அச்சரம் பிசகாம நம்ம தமிழ்ல்ல பேசினாங்க....

அட இங்கன இம்புட்டு தமிழ் காரவுக இருக்காகளேன்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்... மனசு உச்சிக்குப் பறக்றது... சாமிய பாக்குறத விட நம்ம ஊரு மனுஷாளை இங்கன பாக்குறது நெம்ப (கோயம்புத்தூர் காரங்களா பாஷை சரியா...? ) சந்தோஷமா இருந்துச்சு...

கோயிலுக்குள்ளே நுழைஞ்ச உடனே நான் பாத்தது...

ஒரு கோஷ்டி ஐயப்ப சாமி பஜனை பாடிட்ருந்துச்சு... அதுவும் தமிழ் ல்ல ... அப்பவே எனக்குப் புரிஞ்சுடுச்சி... ஆஹா இன்னிக்கு ப்ரசாதம் மஹா ப்ரசாதமாத்தான் இருக்கும் ன்னு...! :):):)

நவக்ரகங்களை எல்லோரும் 9 தடவை சுத்துனாங்க....

அது ஏன் நவக்கிரகங்களை சுத்தணும்...? அதுவும் 9 தடவை...? ன்னு ஒரு கேள்வி வந்துச்சு...? நம்ம கோளறு பதிகத்திலும் சரி தவத்திலும் சரி இந்த கிரகங்களுக்குத் தனியா ஒரு இடம் கொடுத்ருக்காங்களே...? அதுவும் சனி ன்னா எல்லா சாமிகளும் கூட பயப்படுறாங்களே.... ஆஞ்சநேயர் மட்டும் exception ...எப்டி ஆனார்...? னு எனக்கு ஒரே மண்டைக் குடைச்சல் வந்துச்சு.

சரி நாமளும் சுத்துவோம்.. எதுனாச்சும் நம்ம மரமண்டைக்கு புரியுதான்னு பாப்போம் னு சுத்துனோம் ...

கோள்கள் ரொம்ப தூரம்... அது எப்படி நம்ம வாழ்க்கையை கட்டுப்படுத்தும்...? நான் படிக்ற காலத்துல Physics Association க்கு நான் தான் அப்ப President. அப்ப நாங்க பெரிய பெரிய Physics ஜாம்பவான்களை அழைச்சிட்டு வந்து எங்க பெளதிக மன்றத்துல பேச வைப்போம்....அப்ப அவங்ககிட்ட...'அப்பல்லாம் நெப்டுயூன் ப்ளூட்டோ ன்னு கெரகங்களே கண்டுபிடிக்கலியே... எப்டி 9 கிரகங்கள் னு சித்தர்கள் சொன்னாக ன்னு ஒரே கேள்வி கேட்டு வர்ர புரபசர்களை டார்ச்சர் பண்ணிடுவேன்... அப்புறம் இப்ப ரீஜண்ட்டாத்தான் நம்ம நாசா அண்ணாச்சிக அந்த ரெண்டு கெரகங்களும் கெரகமே இல்லைன்னு டெக்ளேர் பண்றாள்.... இதானுங்க நம்ம கெரகம் ன்றது.... !அமெரிக்காகாரன் சொன்னானே ன்னு நாம பாடம் படிச்சோம் ... இப்ப அதே அண்ணாச்சி அதுக ரெண்டும் கெரகமே இல்லைன்னு சொல்றா... அறிவியல்ல ராகு கேது இல்லை...

ஆனா இங்கன கோயில்ல ராகு கேது இருக்கே... அப்றம் ஒவ்வொரு கெரகமும் ஒவ்வொரு தெசையில இருக்கே...ஒவ்வொரு நெறத்துல இம்புட்டுக்கோணி துணியக்கட்டி வச்சிருக்காங்களே...? வெளக்கு ஏத்திவைக்கிறாங்களே ன்னு ஒரே கேள்விதாங்க.... யார்கிட்டேன்னு தானே...?

வேற யாருக்கிட்டங்க கேக்கமுடியும்...? அங்கன இருக்ற அர்ச்சகருகிட்டயா கேக்கமுடியும்...?

வழக்கம்போல் நம்ம பிள்ளையார்ட்டதானுங்க...

அப்றம் அங்கன ஒரு திருப்பதி வெங்கடேஸ்வர் இருந்தார். அங்கன யாரும் கூட்டமா இல்லை... எல்லாரும் விநாயகரும் ஐயப்பாவையும் கிரகங்களையும் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.

நான் சரசர ன்னு அந்த வெங்கடேஷ்கிட்ட போயி, "ஹாய் வெங்கி... ஹெள ஆர் யூ....? ஆர் யூ ஓகே..? ஒனக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா வெஜிட்டேரியன் உணவு கிடைக்குதா....? சொல்லுப்பா... எனக்கும் அந்த உபாயம் சொல்லு... " ன்னு கேட்டேன்...

பரவாயில்லைப்பா... உன்னை திருப்பதியில நான் எவ்ளோ கஷ்டப்பட்டு பாக்க வேண்டியிருக்கு.... பேசாம இனிமே நான் நேரா இங்கனயே வந்திட்றேன்...

நல்ல தரிசனம்...

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அருட்பேராற்றல் அலைஅலையாய் பாய்ந்து படர்வதை என்னால் உணரமுடிந்தது.... குண்டலினி தானாகவே சகஸ்ரதளத்தில் வந்தமர்ந்தது....புருவமத்தியில் ஆக்கினையில் அனந்தமயமான அதிர்வுகள்.... தண்டுவடத்தில் குண்டலினி சக்தியானது எறும்பு ஊர்வது போல் முதலில் மெதுவாயும் பின்னர் ஒரு ஊற்று நீர் மேலேறுவது போன்றும் ஒருவித பரவச நிலை....! சிறிது நேரத்தில் மன அலைச்சுழல் தீட்டா அல்லது டெல்டாவிற்குச் சென்றிருக்கவேண்டும்.... நீண்ட நேரம் இருக்கும். பின்னர் தீர்த்தம் கொடுக்கும்பொழுது அந்த அர்ச்சகர் என் நினைவினைக் கலைத்தார்.

ராதா, சிவன், அங்கிருந்த ஒரு சிறிய நந்தியின் காதில் நம் கோரிக்கை வைத்தல்...பின்னர் முருகன் சன்னதி...(நம்ம ஊர் முருகன் .... இங்கேயும் உள்ளது.... நம் முருகனுக்குத் தமிழ் நாட்டில் தவிர மற்ற மாநிலங்களில் கோவில் இருக்குமா எனத் தெரியவில்லை...! கேரளாவில் இருக்கலாம்...ஆந்திரத்தில் அரிதாக இருக்கலாம்.. .வடநாட்டில் இருக்குமா எனத் தெரியவில்லை...)

பின்னர் நம்ம ஹீரோ விநாயகன்...

அப்றம் பக்கத்துல ஒரு ஐயப்ப பஜனை நடந்தது. அங்கேயே உட்கார்ந்துவிட்டோம்... பாடப்பாட என் சிறுவயது ஞாபகங்கள் நினைவிற்கு வந்தது. நேற்றும் சனிக்கிழமை.... என் சின்ன வயதில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் கிருஷ்ணன் கோவிலில் லாந்தர் விளக்கு வெளிச்சத்திலும் குத்துவிளக்கு வெளிச்சத்திலும் பஜனைகள் பாடும்பொழுது மெய்மறந்திருப்போம்.... பஜனை நடனம் வேறு...! அதே நினைவுகள்.... !

'ஏன் மாமி இப்பல்லாம் நீங்க எங்காத்துக்கு வர்ரதே இல்லை...' என இரண்டு மைலாப்பூர் மாமிகள் என் கவனத்தினை கொசுவர்த்திச் சுருள் சுற்றிமுடித்து ஃப்ளாஷ் பேக்கிலிருந்து மீட்டுக் கொண்டுவந்தனர்.

ப்ரசாதம் நிஜமாகவே மஹா ப்ரசாதம்... நம்ம தமிழ்நாட்டு ப்ரசாதம்தான்...! கேசரி நன்றாக இருந்தது...சாதம் பாயாசம் என எனக்கு ப்ரசாதமே வயிறு ஃபுல்...

அப்புறம் நம் சக நண்பர்கள் வந்ததே வந்துட்டோம்.... அப்டியே கேண்டீன்ல ஒரு கட்டுகட்டீட்டுப் போயிடுவோம் னாங்க... நம்ம மெட்ராஸ் காஃபியும் இருந்துச்சு... டிபன் பண்ணிட்டு... அட நம்ம ஊர் தோசைங்க... நம்ம சட்னி சாம்பார்... நம்ம மெட்ராஸ் காஃபி....

ஆஹா அந்த பில்டர் காஃபி துளித்துளியாய் ரசித்துக் குடிக்க முடிந்தது... நாக்கின் நுனி மொட்டுக்களில் ஆரம்பித்து அது ஒவ்வொரு செல்லாக பயணித்து தொண்டைக் குழியில் அதன் தித்திப்பையும் கசப்பையும் அழுத்தமாய் நிறுவிவிட்டு... உணவுக்குழல் வழியிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் அதன் ருசியையை சேர்த்துவிட்டு இரைப்பையை அடைய அதிக நேரமானது... கண்மூடி ரசித்து லயமாயிருந்தது... காஃபி குடிப்பதுவும் ஒரு தவம்தானோ...? இதுதான் ஜென் மெடிட்டேஷனோ....?

மனம் அமைதியாய் ஒருவித லயமாய் இருந்தது... இருக்கின்றது இந்த நொடிவரை...!( 07-Oct-2007 Sunday 4:32 PM EST)




--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்
==========================================================================================

Feedbacks:

Siva Siva hide details Oct 7
reply-to nambikkai@googlegroups.com
to nambikkai@googlegroups.com
date Oct 7, 2007 7:54 PM
subject [NAMBIKKAI] Re: ரிஷியின் பக்கம்....
mailed-by googlegroups.com

அது ஏன் நவக்கிரகங்களை சுத்தணும்...? அதுவும் 9 தடவை...? ன்னு ஒரு கேள்வி வந்துச்சு...?

ஏன் 9 முறை? நல்ல கேள்வி. யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்களேன்.



அட நம்ம ஊர் தோசைங்க... நம்ம சட்னி சாம்பார்... நம்ம மெட்ராஸ் காஃபி....

ஆஹா அந்த பில்டர் காஃபி துளித்துளியாய் ரசித்துக் குடிக்க முடிந்தது... நாக்கின் நுனி மொட்டுக்களில் ஆரம்பித்து அது ஒவ்வொரு செல்லாக பயணித்து தொண்டைக் குழியில் அதன் தித்திப்பையும் கசப்பையும் அழுத்தமாய் நிறுவிவிட்டு... உணவுக்குழல் வழியிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் அதன் ருசியையை சேர்த்துவிட்டு இரைப்பையை அடைய அதிக நேரமானது... கண்மூடி ரசித்து லயமாயிருந்தது... காஃபி குடிப்பதுவும் ஒரு தவம்தானோ...? இதுதான் ஜென் மெடிட்டேஷனோ....?



'சுவை'யாக எழுதியிருக்கிறீர்கள் :)

நன்றாக உள்ளது உங்கள் பிள்ளையார் கோயில் விஜய வர்ணனை.

==========================================================================================

வேந்தன் அரசு hide details Oct 7
reply-to nambikkai@googlegroups.com
to nambikkai@googlegroups.com
date Oct 7, 2007 8:40 PM
subject [NAMBIKKAI] Re: ரிஷியின் பக்கம்....
mailed-by googlegroups.com


On 10/7/07, Siva Siva wrote:

அது ஏன் நவக்கிரகங்களை சுத்தணும்...? அதுவும் 9 தடவை...? ன்னு ஒரு கேள்வி வந்துச்சு...?

ஏன் 9 முறை? நல்ல கேள்வி. யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்களேன்.


ஒரு கோளுக்கு ஒரு முறை
=========================================================================================

Devarpiran Krishnan hide details Oct 7
reply-to muththamiz@googlegroups.com
to nambikkai@googlegroups.com
cc
muththamiz@googlegroups.com,
Piravakam@googlegroups.com
date Oct 7, 2007 11:52 PM
subject [muththamiz] Re: [NAMBIKKAI] ரிஷியின் பக்கம்....
mailed-by googlegroups.com


=


நானும் பல நேரங்களில் நினைத்ததுண்டு

மனம் அமைதியாய் ஒருவித லயமாய் இருந்தது... இருக்கின்றது இந்த நொடிவரை...!( 07-Oct-2007 Sunday 4:32 PM EST)



நல்ல வர்ணனை..

===========================================================================================

Shylaja N hide details Oct 8
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Oct 8, 2007 12:52 AM
subject [muththamiz] Re: ரிஷியின் பக்கம்....
mailed-by googlegroups.com
வர வர சின்ன லா ச ரா ஆயிட்டுவரீங்க ரவி! நல்ல வர்ணனை! filter coffee கொடுத்தே உங்களை கடத்திடலாம் போலிருக்கே?:)

===========================================================================================

Tthamizth Tthenee hide details Oct 8
reply-to nambikkai@googlegroups.com
to nambikkai@googlegroups.com
date Oct 8, 2007 4:19 AM
subject [NAMBIKKAI] Re: ரிஷியின் பக்கம்....
mailed-by googlegroups.com
திரு ரிஷி ரவீ்ந்திரன் அவர்களே
நீங்கள் பிள்ளையாரைப் பற்்றி எழுதிய கட்டுறை
மிகவும் ரசிக்கத்தக்க முறையில் வடிவமைப்பட்டுள்ளது
உங்களுக்கு அந்தத் தி்ருவண்ணாமலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து
சுமார் 2 கிலோ மீட்டர் அருகில் உள்ள அந்த ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவன்ணாமலையப் பற்றிதான் சொல்லுகிறேன்
அந்த ஸ்ரீனிவாசனும் அந்த மலையின் கீழே ப்ரும்மாண்டமாய்
அமர்ந்திருக்கும் ஸ்ரீ ஆதி வினாயகனும் உங்களுக்கு
அருள் புறிந்திருக்கிறார்கள் என்று இக்கட்டுரையைப் படிக்கும் போது புரிகிறது
என்ன ஆச்சரியம் எனக்கும் சொந்த ஊர் ஸ்ரீவில்லி புத்தூர்
குலதெய்வம் திரு்வண்ணாமலை ஸ்ரீனிவாஸன்்தான்
அந்தக் குளக்கறையில் கன கம்பீரமாக உட்கார்ந்திருக்கும்
அந்த ஆதி வினாயகனையும் மலைமேல் குடிகொண்டிருக்கும்
ஸ்ரீனிவாஸனையும் வருடத்துக்கு ஒருமுறையாவது
சென்று தரிசனம் செய்வது என் வழக்கம்
உங்களுக்காக அந்த வினாயகனின் திரூவுருவப் படத்தை இங்கு அளிக்கிறேன்



அன்புடன்
ஆர்.கிருஷ்ணமாச்சாரி
என்கிற
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc19,,,@gmail.com
- Show quoted text -

=====================================================================================

Friday, March 30, 2007

ரிஷியின் பக்கம்

*வேந்தன் ஐயா அவர்களுடன் என் அனுபவம்...*

முன் குறிப்பு:

(வித்தியாசமா முன்குறிப்புன்னு இருக்றதுல ஒண்ணும் தப்பு இல்லையே...!)

இது என் நிஜ அனுபவம்... இதுவும் ஒரு காமெடியாகவே அமைந்துவிட்டது... என்ன செய்ய...? எல்லாம் அறியாமையினால் வரும் பிழைகள்...


===========================================================


அப்பத்தான் நான் நம்பிக்கை குழுமத்தில் சேர்ந்திருந்தேன்...


ஆசைக்கோளாறுல மனசுல என்னென்ன தோணுச்சோ அத எல்லாம் எழுத ஆரம்பிச்சேன்.


அப்ப எனக்கு ராமா வ மட்டுந்தான் தெரியும்...


ராமா தான் நம்பிக்கை; நம்பிக்கை தான் ராமா அப்டீன்னு நெனச்சிக்கிட்ருந்தேன்...


வேந்தன் ஐயா அவுகளும் பின்னூட்டம் இடுவார் என்னோட உளறலுக்கு...அப்பல்லாம் நான்
இப்டித்தான் நெனச்சிக்குவேன்...


"ஐயோ... யாரு பெத்த புள்ளயோ... நம்ம கடுதாசிக்கு பதிலு போடுதே.. மாரியாத்தா
இந்த தம்பிக்கு கை, காலு சொகம் கொடு தாயி" அப்டீன்னு நெனச்சிக்குவேன்...


அப்றம் அவரோட கடுதாசில கீழ "வள்ளுவம் என் சமயம்" அப்டீன்னு போட்ருப்பாரா...


ஆஹா இந்த தம்பிக்கும் நம்மள மாதிரியே வள்ளுவர பிடிச்சிருக்கே...னு எனக்கு ஒரே
ஆச்சர்யம்...!!


அங்கன சின்சின்னாட்டி ன்னு போட்ருப்பார்...


ஆஹா இந்தத் தம்பி எம்புட்டு அழகா நம்ம "சின்னக்காம்பட்டிய..." இங்கிலீஷுல
சொல்லுது...னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்...


(எங்க கிராமத்துக்கு பக்கத்ல "சின்னக்காமன்பட்டி" ன்னு ஒரு ஊரு இருக்குங்க...)


(அப்டி நெனச்சதுக்கு ஒரு காரணம் இருக்கு...அத பின் குறிப்புல
படிச்சுக்கோங்கோ...)


ம்ம்... நமக்குத்தான் இந்த பாழாப்போன இங்கிலீபீசு மர மண்டையில ஏறல...


ஒரு நாளாச்சும் இந்த தம்பிய சிநேகம் பிடிச்சி நம்ம ஊரு பசங்ககிட்ட
இண்டரூஸ்ட் (Introduce)
பண்ணனும் னு நெனச்சேன்...


அப்றம் இந்த ஊருக்கு வந்தப்ப தான் தெரிஞ்சது... வேந்தன் ஐயாவப் பத்தி...அவரு
பெரியவருன்னு.....அவரும் இந்த தேசத்ல தான் இருக்காருன்னு ஒரு தடவ ராமா சொன்னார்
அப்றமா...


இன்னொரு தேசத்ல ஒரு தமிழ்க்காரவுகளோட காண்டாட்டு (Contact) கெடச்சா எம்புட்டு
ஒத்தாசய இருக்கும்...னு நெனச்சி அவுகளுக்கே ஒரு மடல் போட்டேன்..


ஐயா... நீங்க எங்கன இருக்கீங்க...? அப்டீன்னு


வள்ளுவம் என் சமயம் னு எழுதியிருக்குல்ல... அதுக்கு மேல எழுதியிருக்கோம்ல
பாக்கலியா அப்டீன்னு சொல்லிட்டார்...


அப்றமாத்தான் தெரிஞ்சது


ஆஹா அது சின்னக்காம்பட்டி(சின்னக்காமன் பட்டி) இல்லடா .. னு..


இங்கன விசாரிச்சப்ப சின்சின்னாட்டி...அப்டின்னு ஒரு ஊரு நெசமாவே இருக்காம்...


அடி ஆத்தி இம்புட்டு விஷயம் இருக்கா...?


விளி : ஒண்ணு ரெண்டு மூணு அப்டின்னு எதோ நெம்பரா (NUMBER) எழுதியிருந்தாக...


சரி நாம ஒழுங்கா படிக்கல... அதான் ஒண்ணாப்ல இருந்து சொல்லிக்கொடுறார் போல ன்னு
நெனச்சேனுங்க...


அப்றமா இப்ப (14-Dec-2006, Thursday Night) தூங்கிட்ருக்றப்ப தான்


திடீர்னு புத்தருக்கு போதியில் எப்டி ஞானம் வந்துச்சோ அது மாதிரி ஒரு ஃபிளாஸ்
வந்திச்சுங்க...


எங்கூர்ல சின்ன செங்கல்ல நெம்பர்(NUMBER) ஊஸ் (USE) பண்ணி காதுல வச்சி
பேசுவாங்கல்ல
ஒரு வேளை அதுவா இருக்குமோ ன்னு பட்டுச்சு ங்க...


சரி ன்னு அந்த பழய மடல எல்லாம் தேடோ தேடு ன்னு தேடிட்டேனுங்க...ராத்திரி
தூக்கம் இல்லாம தேடினேனுங்க... கெடைக்கல...


என்ன கெரகமோ ன்னு பாத்தா, "Wireless Network Connection Not Connected.."
அப்டீன்னு
ஒரு சின்ன சதுர ட்ப்பாவுக்குள்ள சொல்லிச்சு நம்ம மடிக்கணினி.


எப்பவும் போல "ங்எ" ன்னு முழிச்சிட்ருந்தேன்...!


அப்றம் ரவுட்டர தாஜா பண்ணி இப்ப அனுப்றேனுங்க...கடைசி வர்ல இப்பக்கூட அந்த
கடுதாசி ஜீமெயில்ல காணோம்ங்க...


பின் குறிப்பு:


கூத்திப்பாரை ன்னு ஒரு கிராமத்ல பஸ்சுக்காக நின்னுக்கிட்ருந்தேன்...அப்ப ஒரு
தாத்தா வந்தார். அப்ப நான் ஐ ஸ்கூல் (High School) படிச்சிட்ருந்தேன்... கால்ல
கொழாயி(PHANT) மாட்டிருப்பேன்...அப்ப அதுக்கு தனி மவுசு. படிச்சவகதான் கொழாயி
போடுவாக...


அந்த தாத்தா, "ஏந்தம்பி... இம்புட்டு பெரிய படிப்பு படிக்றியே...
"கூத்திப்பாரைக்கு இங்கிலீஷ்ல என்னன்னு சொல்லு...?" அப்டீன்னார்...


இங்கிலீஷ்லயும் அதே தான் தாத்தா...


"ஓ...அப்ப நீ பெயிலு விழுந்து பெயிலு விழுந்து படிச்சிட்ருக்கியோ...?"


அவரு அங்கன இருந்த எல்லார் கிட்டயும், "நான் இந்த தம்பிகிட்ட ஒரே ஒரு சின்னக்
கேள்விதான் கேட்டேன்...பதிலு தெரியாம பேக்கு பேக்குன்னு முழிக்குது..." னு
சொல்லி மானத்த வாங்கிட்ருந்தார்...


இதென்னடா கெரகம் னு நெனச்சேன்.


எங்கூட இன்னொரு பயபுள்ள நின்னுட்ருந்தான்... அவனோ, "என்ன தாத்தா
கேட்டீக... கூத்திப்பாரைக்கு
இங்கிலீஷ்லயா...? அது "க்குட்ட்ப்பா..."(KKUTTPPA)" என்று நீட்டி ஒரு ஸ்டைலா
சொன்னான்.


பரவாயில்லியே... கெட்டிக்காரத்தம்பி... இந்தத் தம்பி மாதிரி படிக்கணும் னு எனக்கு
அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார்...


என்ன செய்ய நம்ம கெரகம் அப்படி...?!


எப்பவும் போல 'ங்எ' ன்னு முழிச்சிட்ருந்தேன்...!


சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."